1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற்று வந்த தகுதியான பயனாளிகளையும் திடீரென நீக்கியதாகப் புகார் எழுந்தது. அதிக வருமானம் போன்ற தகுதியில்லாதோர், இறந்தோரின் பெயர்கள் அவ்வப்போது நீக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தகுதியுள்ள பெண்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. அவர்கள் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். இதையடுத்துநீக்கப்பட்ட பயனாளிகளை மேல்முறையீடு செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.