இடைத்தேர்தலில் விஜய்யின் த.வெ.க? புஸ்ஸி ஆனந்த் பதில்

50பார்த்தது
இடைத்தேர்தலில் விஜய்யின் த.வெ.க? புஸ்ஸி ஆனந்த் பதில்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா என கேட்டபோது, “கட்சியின் தலைவர் அறிக்கை மூலம் 2026 -ம் ஆண்டு தான் எங்கள் இலக்கு என்று தெளிவாக சொல்லி இருக்கிறார். அதனால் இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட வாய்ப்பில்லை" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி