நடிகர் மனோஜ் மறைவையொட்டி அவரது உடலுக்கு தவெக தலைவர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவர், மனோஜ் உடலுக்கு மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினார். அங்கு அவரது தந்தையும், இயக்குநருமான பாரதிராஜா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோஜ் உடலுக்கு, விஜய் நடந்து வந்தே அஞ்சலி செலுத்தினார். விஜய்யின் வீடும் நீலாங்கரையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.