வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்?

80258பார்த்தது
வெற்றி துரைசாமிக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய்?
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு இமாச்சல பிரதேசம் சட்லஜ் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் இன்று சென்னை கொண்டுவரப்பட்டு, சிஐடி நகர் இல்லத்தி வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் வெற்றி துரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் திரும்பி சென்றுவிட்டார். இதனை சைதை துரைசாமியிடம் புஸ்ஸி ஆனந்த் தெரியப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி