மக்கள் நீதி மய்யத்திற்கு சின்னம் ஒதுக்கீடு

560பார்த்தது
மக்கள் நீதி மய்யத்திற்கு சின்னம் ஒதுக்கீடு
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச்லைட் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் டார்ச்லைட் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து கமல்ஹாசன் கட்சி எப்படி பெற்றது? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிட்டது. அதேபோல் இந்த முறையும் கட்சிக்கு டார்ச்லைட் சின்னம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் டார்ச் லைட் சின்னத்தை வழங்கியுள்ளது.