வேலூர்: எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

64பார்த்தது
வேலூர்: எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், வேலூர் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலப்பிரச்சனை, பண மோசடி, வழி பிரச்சனை என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை மனுக்களாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடீஸ்வரனிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற அவர், சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசாரை அழைத்து மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி