வேலூர் கிரின் சர்க்கிள் பகுதியில் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என நூதன முறையில் மிக்கி மௌஸ் வேடமணிந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களுக்கு மிக்கி மௌஸ், பேனா வழங்கி தலைக்கவசம் அணிய வேண்டுமென விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. வேலூரில் டிசம்பர் 1 முதல் தலைகவசம் அணியாத வாகன ஓட்டிகளுக்கு ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.