ரூ. 1 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு!

56பார்த்தது
ரூ. 1 கோடியில் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ஆய்வு!
வேலூர் கொணவட்டம் மதினா நகர், அப்துல் கலாம் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் பணிகள் முடிக்கப்பட்டு 13 இடங்களில் சாலை அமைக்கும் பணி ரூ. 1 கோடியே 9 லட்சத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை மாநகராட்சி மேயர் சுஜாதா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைந்து மற்றும் தரமாக முடிக்க ஒப்பந்ததாரர்களிடம் அவர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி