வேலூர் அடுத்த வேலப்பாடி பெரிய தனம் சுப்புராயன் தெருவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறியுள்ளது.
பின்னர் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யாமல், பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முழுவதுமாக மூடாமல் விட்டுள்ளனர். அந்த பள்ளத்தில் தண்ணீர் நிரம்பி சேரும் சகதியுமாக காணப்படும் நிலையில் இன்று அதிகாலை செங்கல் ஏற்றி வந்த லாரி பள்ளத்தின் சிக்கிக் கொண்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இந்நிலையில் பள்ளத்தில் செங்கல் ஏற்றி வந்த லாரி சிக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து பள்ளத்தை முழுவதுமாக மூட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.