1. 30 லட்சம் ஆடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு: கலெக்டர் தகவல்!

73பார்த்தது
வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெள்ளாடுகள், செம்மறியாடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக்கொல்லி நோய் ஒன்றாகும். இந்த நோய் மிக கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்த கிருமியானது நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீர், கண்ணீர் மற்றும் சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது.

எனவே, இந்த நோய் தாக்காத வகையில் வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த நிவாரணம்.

வேலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக் கொல்லி நோய் ஒழிப்புத் திட்டத்தில் தடுப்பூசிப்பணிகள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்கி 30 நாட்களுக்கு மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே ஆடு வளர்ப்போர் தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது 4 மாதத்திற்கு குறைவான வயதுள்ள ஆட்டுக்குட்டிகள் மற்றும் சினையுற்ற ஆடுகள் நீங்கலாக மற்ற அனைத்து ஆடுகளுக்கும் தவறாமல் ஆட்டுக் கொல்லி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி