சந்தையால் போக்குவரத்து நெரிசல்: மக்கள் அவதி!

60பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய சந்தையான ராணிப்பேட்டை வாரச்சந்தையில் ஆட்டு சந்தை வியாபாரம் நடந்தது. வருகிற 17-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை நடைபெற உள்ள நிலையில் ராணிப்பேட்டை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களாக உள்ள வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடு விற்பனை செய்யவும் வாங்குவதற்காகவும் வந்தனர்.

அதிகாலை முதலே சந்தையில் விற்பனை களைகட்டிய நிலையில் சந்தை புனரமைப்பு பணி காரணமாக போதிய இட வசதி இல்லாமல் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆகவே வாரச்சந்தை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி