வாணியம்பாடியில் 6 கிலோ போதை பொருள் பறிமுதல்

56பார்த்தது
வாணியம்பாடியில் 6 கிலோ போதை பொருள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டியப்பனூர் பகுதியில் விஜயா (வயது 48) என்பவர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 6 கிலோ போதை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அவர்களின் வங்கிக் கணக்கை முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல், போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை குறித்த தகவல்களை 91599 59919 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவித்து போதை பொருள் இல்லாத திருப்பத்தூர் மாவட்டத்தை உருவாக்க காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். தகவல் கொடுப்போரின் விவரம் ரகசியம் பாதுகாக்கப்படும். மேலும் போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி