புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் (65) இன்று (நவ., 10) காலமானார். மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. பல்வேறு சிறுகதைகள், நாவல்கள் உள்ளிட்டவற்றை எழுதியுள்ளார். இவர் தென்னிந்திய இந்துமத பாரம்பரியம் மற்றும் புராண இதிகாசங்களைக் கலந்து எழுதுவதில் வல்லவர் என பெயர் பெற்றவர். நாக பஞ்சமி, நந்தி ரகசியம், நீலக்கல் மோதிரம், தங்கக் காடு, விடாது கருப்பு உள்ளிட்ட கதைகளை படைத்துள்ளார். இவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.