மூத்த நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது X தள பக்கத்தில், "டெல்லி கணேஷ் மறைந்தார் என்ற செய்தி பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. நகைச்சுவையை நுட்பமாகக் கையாளும் அரிய குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ். அவருடன் நான் செலவிட்ட தருணங்கள் இனியவை. நினைவில் நிற்பவை. அண்ணன் கணேஷை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.