அதிமுக திட்டங்களை திமுக அரசு முடக்கியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "அதிமுக 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்தது. அதிமுக அரசு கொரோனா காலத்தில் பாராட்டு, விருதுகளை பெற்றது. திமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குற்றங்கள் அதிகரிக்க கஞ்சா போதையே காரணம்" என்று காட்டமாக பேட்டியளித்துள்ளார்.