வாணியம்பாடி அருகே ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே சங்கராபுரம் பகுதியில் மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி. சாம்ராஜ், வேலுச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் சத்திராஜா செந்தில்குமார், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் பாரதிதாசன், செல்வராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்.