வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விருதம்பட்டு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட எல்ஜி புதூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் வளாகத்தில் பொது பாதையில் எந்தவித அனுமதியும் இல்லாமல் புதிதாக கிராம மக்களால் மூன்று அடி உயரம் கொண்ட அம்மன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான இடத்தில் சாமி சிலை வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய்த் துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாமி சிலையை அகற்றினர். அப்போது கிராம பெண்கள் சாமி ஆடியும், கிராம மக்களில் சிலர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.