திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கண்காரடியா மேல் நிலைப்பள்ளி 11ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்(பொறுப்பு)ஜான்சன் தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். நகரமன்ற தலைவர் பத்தேகான் ஏஜாஸ் அஹமத், துணைத்தலைவர் எம். ஆர். ஆறுமுகம், திமுக மாவட்ட அவைத்தலைவர் ஆர். எஸ். ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. செ. வில்வநாதன் கலந்து கொண்டு 11ம் வகுப்பு படிக்கும் 53 மாணவிகளுக்கும், 92 மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சகிந்தர் நன்றி கூறினார்.