*காக்கங்கரை பகுதியில் வீட்டு பக்கத்திலேயே கள்ளத்தனமாக 24 மணி நேரமும் மது விற்பனை. குடித்துவிட்டு கணவன்கள் செய்யும் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவிகள் எஸ்பி அலுவலகத்தில் புகார்*
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை காலனி பகுதியை சேர்ந்த
சதீஷ் மனைவி ஜெயந்தி மற்றும் மாரிமுத்து மனைவி கௌரம்மாள் ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து தங்களுடைய வீட்டின் அருகே நாகராஜ் மனைவி மோனிஷா மற்றும் கோவிந்தன் மனைவி சுஜாதா ஆகிய இருவரும் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர் என்றும் இதனால் தங்களது கணவன்மார்கள் அடிக்கடி குடித்து விட்டு பகல் இரவு என்று பாராமல் எங்களை அடித்து துன்புறுத்தி வருகின்றனர் என்றும் கூறி மனு அளித்தனர்.
மேலும் கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு அளித்தனர்
அப்போது அவர்கள் கதறியது காண்போரை நெகிழச் செய்தது அவர்கள் கூறுகையில் சார் நாங்க 100 நாள் வேலை செய்து ரேஷன் அரிசி சாப்பிட்டு குடும்பம் நடத்தி வருகிறோம். நாங்கள் சம்பாதிப்பதையும் பிடுங்கிக் கொண்டு எங்கள் கணவர் அருகில் கள்ளத்தனமாக விற்பனை செய்யும் மதுபாட்டில்களை வாங்கி குடித்து விடுகின்றனர். இது குறித்து கேட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவருகிறது.