குடியாத்தம் அடுத்த பரதராமி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஹான்ஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மதிவாணனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத் தரவின் பேரில் கே. வி. குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், பரதராமி சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார் நேற்று மாலை பரதராமி மெயின் ரோடு சரஸ்வதி நகரில் உள்ள முரளி (வயது 40) என்பவரது பெட்டிக்கடையில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு சுமார் 5 கிலோ ஹான்ஸ் பண்டல்கள் கைப்பற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முரளியை கைது செய்தனர். அவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து போதை பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.