பிரம்மாவிடம் இருந்த வேதங்களை அசுரர்கள் அபகரித்து கடலுக்கு அடியில் மறைத்து வைத்தனர். குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவர் அசுரர்களிடமிருந்து வேதங்களை மீட்டார். எனவே ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்கு ஞானங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள ஹயக்ரீவரை தரிசிப்பவர்களுக்கு குடும்ப ஒற்றுமை, தம்பதி ஒற்றுமை ஏற்படும் என்றும், குழந்தைகளுக்கு கல்விச் செல்வம் அதிகரிக்கும் என்பதும் ஐதீகம்.