திருவலம் அருகே தொழிலாளி தற்கொலை

66பார்த்தது
வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த ஏரந்தாங்கல் பணந்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் செங்கல் சூளை தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். இருப்பினும் வயிற்று வலி குணமாகவில்லையாம். இந்த நிலையில் இன்று காலை புருஷோத்தமன் மீண்டும் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புருஷோத்தமனின் மகன் அஜித் குமார் திருவலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார் அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி