காலை உணவு திட்டத்தை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.

59பார்த்தது
வேலூரில் ஊரகப் பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை காட்பாடி அடுத்த கிறிஸ்டியன்பேட்டை பகுதியில் உள்ள நிதியுதவி தொடக்கப்பள்ளியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார்.

இதில் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 68 ஊரக அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் 1-5-ம் வகுப்புகளில் பயிலும் 1296-மாணவர்கள், 1244-மாணவிகள் மொத்தம் 2540 மாணவ மாணவிகள் இத்திட்டத்தில் பயன்பெறுகின்றனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில்,

தமிழகத்திற்க்கு அதிகமான தண்ணீர் தேவைபட்டாலும் அத்தியாவசிய தேவைகக்காக ஒரு டிஎம்சி நீரை தமிழகத்திற்க்கு வழங்க வேண்டும் என காவேரி ஒழுங்காற்று குழு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் ஒரு டிஎம்சி யை கூட தர மாட்டேன் என அடம்பிடித்தார்கள்.

நாங்கள் நிலைமைகளை விளக்கி நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினோம். அதன் பிறகும் அந்தப் போக்கில் இருந்து கர்நாடக அரசு மாறாமல் ஒரு டிஎம்சி வழங்க முடியாது என மறுத்துவிட்டு 8 ஆயிரம் கன அடி தருகிறோம் என சொல்கிறார்கள்.
ஒரு டிஎம்சி என்பது
11 ஆயிரத்தி 574 கனஅடி ஆகும். இந்த மாவட்டத்தில் உள்ள காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும் பள்ளிகளை திடீர் ஆய்வு செய்ய உள்ளேன் என்றும் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.

தொடர்புடைய செய்தி