காட்பாடி ரயில் நிலையம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

80பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடி ரயில் நிலையம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு வட மாநில வாலிபர்கள் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு ஏரிக்கரை ஓரம் வடமாநிலம் வாலிபர்கள் மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது

இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர் அப்பொழுது வடமாநில வாலிபர்கள் காட்பாடி ரயில் நிலையம் அருகே மூட்டைகளில் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது

போலீசாரை கண்டதும் வடமாநில வாலிபர்கள் ஓட முயன்றனர் மதுவிலக்கு போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் லட்சம் பூரை சேர்ந்த ஜெயக்குமார் சிங் (32), தசரத் ராஜ் (28) என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்

கைது செய்யப்பட்ட இரண்டு வட மாநில வாலிபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி