தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் இறப்பில் சந்தேகம்

58பார்த்தது
*நாட்றம்பள்ளி அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்ட உறவினர்களிடம் குழந்தைகளை சாட்சியாக வைத்து சாதுரியமாக பேசி சமரசம் செய்து வைத்த காவல் ஆய்வாளர்*


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அப்புழு மகன் குமரேசன் என்பவருக்கும் விளக்கல் நத்தம் அடுத்த மல்ல பள்ளி பகுதியில் வசிக்கும் வஜ்ரம் மகள் பிரியாவிற்கும் இரு வீட்டார் சமூகத்துடன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி இவர்களுக்கு எட்டு வயதில் ஓவியா ஸ்ரீ என்கிற மகளும் ஆறு வயதில் எஸ்வந்த் பிரபாஸ் என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குமரேசன் சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்ற நிலையில் ஏற்கனவே இங்கே இருக்கும் பொழுது அதே பகுதியில் வசிக்கும் வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்பட்ட நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் தொடர்ந்து சண்டை வந்துள்ளது.

இது தொடர்பான சண்டை நேற்றைய முன்தினம் இரவும் தொலைபேசி வாயிலாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை உள் தப்பால் போட்டு கதவை பூட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பிரியாவின் சடலத்தை அவருடைய மகள் ஓவியா ஸ்ரீ பார்த்துவிட்டு குடும்பத்தாரிடம் கூறியுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி