அதிமுகவுடன் கூட்டணிக்கு வர ரூ.100 கோடி வரை கட்சிகள் கேட்கின்றன என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். இந்நிலையில், அதிமுக உடன் கூட்டணிக்கு வர கட்சிகள் அஞ்சுகின்றன என திண்டுக்கல் சீனிவாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "2019 மக்களவைத் தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சிகளான சிபிஐக்கு ரூ.15 கோடி, சிபிஎம்-க்கு ரூ.10 கோடி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ரூ.15 கோடி, மொத்தம் ரூ.40 கோடி கொடுத்துள்ளது" என்று கூறியுள்ளார்.