உத்தர பிரதேசத்தின் அயோத்தியாவை சேர்ந்த தேவ்நாத் திவாரி (59) என்ற நபர் சில தினங்களுக்கு முன்னர் தனது வீட்டு வாசலில் இருக்கும் கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது உள்ளே இருந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்தனர், தொடர்ந்து தேவ்நாத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக போலீசார் தற்போது தெரிவித்துள்ளனர்.