*திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயின் கொள்கையை ஆதரித்து பேசிய அதிமுகவை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை. 2026 இல் அதிமுகவும் தமிழக வெற்றி கழகமும் இணைவதற்கு பாலம் அமைக்கும் வகையில் முன்னாள் சபாநாயகரின் பேச்சு பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு*
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி சாலை தனியார் வணிக வளாகம் அருகே நடைபெற்ற அதிமுகவின் 53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்ட நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சரும் முன்னாள் சபாநாயகருமான தம்பிதுரை திராவிடம் என்பது பெரியாரின் பார்வையில் துவங்கப்பட்டு அண்ணாவின் பார்வையில் தென் தமிழகத்தின் தெலுங்கு மலையாளம் கன்னடம் தமிழ் ஆகியவற்றை ஒன்றிணைத்து திராவிடம் என்று உருவாக்கப்பட்டு திராவிட சித்தாந்தம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது திமுகவில் இருந்து பிரிந்து வந்த நம்முடைய முன்னாள் முதலமைச்சர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்று ஆரம்பித்தது திராவிடத்தோடு சேர்த்து தமிழ் தேசியத்தையும் கடைப்பிடிக்கும் வகையில் உருவாக்கினார்.