*ஆரம்பிக்காத அப்சர் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி மற்றும் அபராதம் சேர்த்து 26, 40, 502 ரூபாய் கட்ட சொல்லி கூலி தொழிலாளிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தால் பரபரப்பு அது சம்பந்தமான நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட நபர் மனு*
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் வசிப்பவர் அப்பாஸ் மகன் அப்சர் கூலி வேலை செய்து வரும் இவர் அப்சர் டிரேடர்ஸ் என்கிற நிறுவனத்தை தொடங்கியதாகவும் அதற்கான ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராத தொகையாக 26, 40, 502 ரூபாய் கட்ட வேண்டும் என்று கடந்த மாதம் 27ஆம் தேதி சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்திலிருந்து கடிதம் வந்தது மட்டுமின்றி ஜோலார்பேட்டை இந்தியன் வங்கியில் இவர் வைத்திருந்த வங்கி கணக்கும் முடக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சி அடைந்த அப்சர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் நடத்தாத கம்பெனிக்கு வரியும் அபராதமும் கட்டச் சொல்லி நிதி மோசடி செய்து தற்போது மேற்படி நிறுவனத்தை மூடியும் சென்றுள்ள நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு கொடுக்க வந்ததால் பரபரப்பு காணப்பட்டது.