ஏரியில் உபரி நீர் வெளியேறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

60பார்த்தது
*திருப்பத்தூர் பெரிய ஏரியில் சமீப தினங்களாக பெய்த லேசான மற்றும் கனமழையின் காரணமாக உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி*


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பெரிய ஏரி திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாடப்பள்ளி மடவாளம் குரிசிலாப்பட்டு கந்திலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த மழையில் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறக்கூடிய சூழ்நிலையை விவசாயிகள் எதிர்பார்த்து வந்தனர்.

ஆனால் இந்த வருடம் பெய்த மழை அவ்வப்போது மட்டுமே பொழிந்து ஏமாற்றத்தை ஏற்படுத்திய நிலையில் புயல் காரணமாகவும் பருவ மழை காரணமாகவும் தாமதமாக வந்த மழை பொழிவு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த லேசான மற்றும் கனமழையின் காரணமாக திருப்பத்தூர் பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி