ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D. V கிரண் ஸ்ருதி அவர்கள் உத்தரவின் படி அரக்கோணம் NDRF பயிற்சி மையத்தில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நிதி நிறுவன மோசடி, போலி சமூக ஊடக கணக்குகள் மோசடி, போலி கடன் செயலி மற்றும் சைபர் கிரைம் உதவி எண்: 1930 , www. cybercrime. gov. in இணையதள முகவரி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் தியாகராஜன் (CCPS காவல் நிலையம் ), சைபர் கிரைம் காவல்நிலைய காவலர்கள், NDRF பயிற்சிமைய அதிகாரிகள், ஆளிநர்கள் கலந்துகொண்டனர்.