*கேத்தாண்டப்பட்டி பகுதியில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து! ஒரு சிறுவன் காயம்! *
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த இடையப்பட்டி பகுதியில் யூனிவர்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளிக்கு திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கம் போல நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஓட்டுனர் வல்லவன் காவேரி பட்டு பகுதியில் இருந்து 8 பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு கேத்தாண்டப்பட்டி வழியாக பள்ளி வாகனத்தை இயக்கி வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க திடீரென வலது பக்கமாக திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகே இருந்த நிலத்தில் கவிழ்ந்து விபத்தானது.
இதில் தருண் என்கிற சிறுவனுக்கு லேசான காயம் ஏற்பட்டது இவரை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அக்கம் பக்கத்தினர் அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான பேருந்தை கிரேன் மூலம் மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர் மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.