வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை!

1533பார்த்தது
வங்கி மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை!
கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் கிஷோர் (வயது 40). அரக்கோணத்தில் பொதுத்துறை வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி தீபா (33). இவர் காஞ்சீபுரத்தில் உளள பொதுத்துறை வங்கி ஒன்றில் உதவி மேலாளராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் அரக்கோணம் ஜவகர் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். கிஷோருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் மீண்டும் நேற்று உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரக்கோணம் டவுன் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி