சாலை விபத்தில் மணமகன் உயிருடன் தீயில் கருகி பலி

71பார்த்தது
சாலை விபத்தில் மணமகன் உயிருடன் தீயில் கருகி பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் நேற்று பயங்கர விபத்து நடந்தது. லாரி மீது கார் மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் மணமகன் ஆகாஷ் உட்பட காரில் பயணம் செய்த 4 பேர் உயிருடன் தீயில் கருகி பலியாகினர். மணமகன் ஆகாஷின் திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருமணம் முடிந்து தனது மனைவி, சகோதரர் மற்றும் மருமகன் உள்ளிட்ட ஆறு பேருடன் பயணித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. விபத்துக்குப் பிறகு, காரில் இருந்து இரண்டு பேர் மட்டுமே தப்பிக்க முடிந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி