அரக்கோணம் விண்டர்பேட்டை பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. அரக்கோணம் பகுதி மக்கள் மின் கட்டணத்தை நேரில் செலுத்தி வருகின்றனர். இனிமேல் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே மின்கட்டணத்தை நேரில் செலுத்த முடியும்.
வெள்ளி, சனி கவுன்டர் திறக்கப்பட மாட்டாது என்று அதிகாரிகள் மின் நுகர்வோர்களுக்கு இன்று தெரிவித்தனர். ஜிபே, போன் பேவில் செலுத்துவதற்கு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.