இறைவன்காடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!

61பார்த்தது
இறைவன்காடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்!
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இறைவன்காடு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் இறைவன்காடு, கழனிபாக்கம், கந்தனேரி, வசந்தநடை ஆகிய 4 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்களை பெற்றனர். அணைக்கட்டு தொகுதி ஏ. பி. நந்தகுமார் எம். எல். ஏ. தலைமை தாங்கினார்.

மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மு. பாபு, அணைக்கட்டு ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் குமாரபாண்டியன், ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்கவேலலு, ரீனாகுமாரி பாபு, கலைச்செல்வி குமரவேல், ஷீலாகுமாரி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 900 மனுக்கள் பெறப்பட்டது. அதில் 60 மனுகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நந்தகுமார் எம். எல். ஏ. தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அப்போது மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்.

முன்னதாக கலெக்டர் சுப்புலெட்சுமி முகாமை ஆய்வு செய்தார். விபத்து காப்பீடு அட்டை கேட்டு மனுகொடுத்த ஒருவருக்கு உடனடியாக அட்டை வழங்கப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலெக்டரும், எம். எல். ஏ. வும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தொடர்புடைய செய்தி