மின்சாரம் தாக்கி டிரைவர் பலி

562பார்த்தது
மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
ஒடுக்கத்தூரை அடுத்த வெங்கனம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவரது மகன் முருகன் டிரைவராக வேலை செய்து வந்தார். திருமணம் ஆகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவரது பெற்றோர்கள் சந்தைகளில் செருப்பு வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முருகன் பனி முடித்துவிட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்பொழுது மின் விளக்கை போடுவதற்கு ஸ்விட்ச்சை ஆன் செய்த பொழுது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த நிலையில் வெளியூர் சென்றிருந்த முருகனின் பெற்றோர்கள் நேற்று மாலை வீட்டுக்கு வந்துள்ளனர். வீடு பூட்டி இருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது மின்சாரம் தாக்கி முருகன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சடைந்தனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி