ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் வாழும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வருவாய்த்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம் மற்றும் மனுநீதி நாள் முகாம்களிலும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சங்கரன் அளித்துள்ள பேட்டியில்
தாங்கள் கிராமத்தில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனைபட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டத்திலும், மனுநீதி நாள் முகாம்களிலும் பலமுறை கோரிக்கை மனு அளிக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.