ரயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி

82பார்த்தது
ரயிலில் இருந்து தவறி விழுந்து என்ஜினீயர் பலி
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே நரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திருமால். இவரது மகன் கோகுல் (வயது 23). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள ஐ. டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் தனது சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுள்ளார். வாணியம்பாடி அருகே விண்ணமங்கலம் பகுதியில் சென்றபோது படிக்கட்டில் பயணம் செய்த இவர் தவறி கீழே விழந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி