ரூ.2 கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை

84பார்த்தது
ரூ.2 கோடிக்கு மேல் காய்கறிகள் விற்பனை
திருப்பூர் மாவட்டம் உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது. இந்த சந்தைக்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் 6,42,600 கிலோ காய்கறிகள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் ரூ.2 கோடியே 47 லட்சத்து 10 ஆயிரத்துக்கு காய்கறிகள் விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர். தற்போது வெங்காயம், தக்காளி உள்ளிட்டவற்றின் விலை குறைந்து காணப்படுகிறது.

தொடர்புடைய செய்தி