மெலனோமோ எனப்படும் உயிர் பறிக்கும் தோல் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா வெற்றி கண்டுள்ளது. mRNA அடிப்படையில், மேட்ரிக்ஸ் முறைகளை பயன்படுத்தி இந்த தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி உருவாக்கும் முயற்சி இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு வரும் என ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.