வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. இவர்தான் ஹீரோவா?

51பார்த்தது
வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.. இவர்தான் ஹீரோவா?
2013ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், சூரி, ஸ்ரீ திவ்யா, சாத்தியராஜ் நடிப்பில் வெளியான அப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவான இந்த படம் சிவகார்த்திகேயன் திரை பயணத்தில் முக்கிய படமாக இது அமைந்தது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் பொன்ராம் இயக்க இருப்பதாகவும் இந்தப் படத்தின் கதையை அவர் நடிகர் கவினிடம் சொல்லியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயனை போல் ஐவரும் சின்னத்திரையில் இருந்து வந்தவர்தான் என்பதால் இந்த படத்தில் கவின் நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி