டெல்லி விமான நிலையம் விரைந்த மத்திய அமைச்சர்

59பார்த்தது
டெல்லி விமான நிலையம் விரைந்த மத்திய அமைச்சர்
டெல்லியில் கனமழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து கார்களின் மீது விழுந்தது. இந்த நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு டெல்லி விமான நிலையத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினார். பின்னர், உடனடியாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி