2026 சட்டமன்றத் தேர்தலுக்கான, திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில், சார்பு அணிகளின் பணிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஆதி திராவிடர் நலக்குழுவின் மாநில நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்க வளாகத்தில் இன்று கலந்துரையாடிய அவர், கடந்த 3 ஆண்டு காலமாக ஆற்றிய பணிகள், ஆதி திராவிடர் நலனுக்காக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் பயனாளிகளிடம் சென்று சேருவதை உறுதி செய்வது போன்ற மக்கள் பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.