ஜார்க்கண்டில் காட்டு யானைகள் தாக்கியதில் இருவேறு சம்பவங்களில் இருவர் உயிரிழந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஈஸ்ட்சிங்பம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இம்மாவட்டத்தின் வனப் பகுதியில் உள்ள சவுதியா கிராமத்தில் யானை மிதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். இதே மாவட்டத்தில் உள்ள திகி கிராமத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் யானை ஒன்று வீட்டை தாக்கியது. இந்த தாக்குதலில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து உள்ளே தூங்கி கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்தார்.