10 ஆண்டுகளில் இரண்டரை கோடி சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன: கார்கே

65பார்த்தது
10 ஆண்டுகளில் இரண்டரை கோடி சிறு தொழில்கள் மூடப்பட்டுள்ளன: கார்கே
மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 2.5 கோடி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) மூடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் 1.3 கோடி MSMEகள் அதிகரித்தாலும், மோடி ஆட்சியில் மூடல்கள் நடந்ததாக அவர் கவலை தெரிவித்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை நலிவடையச் செய்துள்ள பாஜக அரசை அவர் விமர்சித்தார். இதை தனது X இல் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி