கேரளாவின் வயநாடு பகுதியில் இன்று (ஜூலை 30) அதிகாலை கனமழையை தொடர்ந்து 2 மணியளவில் முதலில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாலை 4 மணி அளவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 36 பேர் உயிரிழந்த நிலையில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் வடக்கஞ்சேரி அருகே வெள்ளத்தில் ரயில் தண்டவாளம் மூழ்கியது. இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.