கன்னியாகுமரி மாவட்டம் ஆடராவிளையில் மின் கம்பியைப் பிடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீதர் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவரது நண்பர்கள், செருப்பை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வீசியுள்ளனர். லாரி மேல் விழுந்த செருப்பை ஸ்ரீதர் எடுக்கச் சென்றபோது, மின் கம்பியைப் பிடித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.