தமிழகத்தில் இன்றைய வானிலை நிலவரம்!

64பார்த்தது
தமிழகத்தில் இன்றைய வானிலை நிலவரம்!
தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை கேரளாவின் பெரும்பாலான பகுதிகளிலும், லட்சத்தீவு மற்றும் தென் தமிழகத்தில் சில பகுதிகளிலும் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று (மே 31) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தொடர்புடைய செய்தி