இன்றைய ராசிபலன் (19/03/2024)

66பார்த்தது
இன்றைய ராசிபலன் (19/03/2024)
மேஷம்: இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். எளிதில் அனைத்து செயல்களையும் செய்வீர்கள். இன்று அதிக அளவில் பணம் காணப்படும். வங்கியிலும் கணிசமான தொகையை பராமரிப்பீர்கள். இன்று நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ரிஷபம்: இன்று பதட்டம் காணப்படும். இசையை கேட்பதன் மூலம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காண்பதன் மூலம் மனதிற்கு ஆறுதல் கிடைக்கும். இன்று பணப் புழக்கம் அவ்வளவு சிறப்பாக இருக்காது. செலவுகளும் அதிகமாக காணப்படுவதால் சேமிக்க இயலாது. இன்று ஓய்விற்கு நேரம் கிடைக்காது. கால்களில் வலி காணப்படும்.

மிதுனம்: இன்று சிறப்பான நாளாக இருக்காது. முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அஜாக்கிரதை காரணமாக பயணத்தின் போது பண இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பணத்தை கவனமாக கையாள வேண்டும். செரிமானம் சம்பந்தமான கோளாறுகள் காணப்படும். எனவே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

கடகம்: பொறுப்புகள் அதிகமாக காணப்படும். இன்றைய சூழ்நிலையை சமாளிப்பதை பற்றி சிந்திப்பீர்கள். வீட்டு பிரச்சினைகளை சமாளிப்பது பற்றிய கவலை இருக்கும். இன்று நிதி வளர்ச்சிக்கு உகந்த நாள் அல்ல. மருத்துவ செலவுகள் அதிகமாகக் காணப்படும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. செரிமானம் சம்பத்தப்பட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்படுவீர்கள்.

சிம்மம்: இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். உங்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கும். சேமிப்பிற்கான அடித்தளத்தை இன்று அமைப்பீர்கள். இன்று ஆரோக்கியம் சிறந்து காணப்படும். உங்கள் மனதில் உற்சாகம் காணப்படும்.

கன்னி: கடின உழைப்பின் மூலம் இன்றைய நாளை சிறப்பாக்கிக் கொள்ளலாம். இன்று போதிய அளவு பணம் காணப்படும். உங்கள் கடின உழைப்பிற்கான ஊக்கத்தொகை அல்லது சலுகைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று முழுவதும் ஆரோக்கியம் சிறந்து காணப்படும். உங்களிடம் அதிக ஆற்றல் காணப்படும்.

துலாம்: உங்களுடைய அறிவைப் பயன்படுத்தி இன்றைய நாளை திட்டமிடுங்கள். சில சமயங்களில் நீங்கள் பொறுமையை இழக்க நேரும். இன்று பணத்தை அதிகமாக செலவு செய்வீர்கள். எனவே கடன்களை எதிர்கொள்ள நேரலாம். உங்கள் தாய்க்கு ஒவ்வாமை காரணமாக பாதிப்பு ஏற்படும். அதற்காக பணம் செலவு செய்ய நேரும்.

விருச்சிகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியத்திற்கு செலவு செய்யும் வகையில் இன்று அதிக செலவினங்கள் காணப்படும். தேவையற்ற உணர்வுகள் உங்கள் ஆற்றலைக் குறைக்கும். இதனால் தலைவலி ஏற்படும்.

தனுசு: முறையான திட்டமிட்ட அணுகுமுறை மூலம் இன்றைய நாளை அற்புதமான நாளாக ஆக்கலாம். உங்கள் தொடர்பாடல் திறனை மேம்படுத்தினால் பல சிறப்புகளைப் பெறலாம். நிதி வளர்ச்சி சிறப்பாக காணப்படும். சிறிய அளவில் கடன் வாங்கி உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வீர்கள். உங்களிடம் காணப்படும் ஆற்றல் காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மகரம்: இன்று பயனுள்ள நாளாக இருக்கும். நீங்கள் நேர்மறையான போக்கில் செயல்பட்டால் இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். இன்று அதிக அளவில் பணம் காணப்படும். அதை சிறந்த விஷயங்களுக்காக பயன்படுத்துவீர்கள். உங்களிடம் காணப்படும் உற்சாகம் காரணமாக இன்று உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

கும்பம்: செயல்களை நிறைவேற்றுவதில் தெளிவான மனநிலையை சார்ந்திருப்பீர்க்கள். இது உங்கள் பேச்சில் வெளிப்படும். இன்று பணபுழக்கம் மகிழ்சிகரமாக இருக்காது. பணத்தை தக்க வைக்கும் திறமைகள் இருந்த போதிலும் அதிக செலவுகள் இருப்பதன் காரணமாக பணத்தை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். தாயின் உடல் நிலை பாதிக்கப்படும். அது சரி செய்யக் கூடிய அளவிலான சிறிய பிரச்சினையாகத் தான் இருக்கும்.

மீனம்: உங்கள் அணுகுமுறையில் பொறுமையும் உறுதியும் அவசியம். உங்கள் செயல்களை முன்கூட்டியே திட்டமிடவேண்டியது அவசியம். வீட்டு சீரமைப்பிற்காக பணம் செலவு செய்ய நேரலாம். இதனால் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் தாயின் சிறிய உடல் நிலை பிரச்சினை ஒன்றிற்காக நீங்கள் பணம் செலவு செய்ய நேரும்.